மாதம் ரூபாய் 1000 கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்பம் நிரப்பும் முறை – என்னென்ன ஆவணங்கள் தேவை?

மாதம் ரூபாய் 1000 கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்பம் நிரப்பும் முறை – என்னென்ன ஆவணங்கள் தேவை?

மாதம் ரூபாய் 1000 கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்பம் நிரப்பும் முறை – என்னென்ன ஆவணங்கள் தேவை?
மாதம் ரூபாய் 1000 கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்பம் நிரப்பும் முறை – என்னென்ன ஆவணங்கள் தேவை?

தமிழக அரசின் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் அரசால் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இதற்கான விண்ணப்பங்களை நிரப்பம் செய்யும் முறை மற்றும் அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து விவரங்களை இப்பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பம்

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் என்று முதல்வர் பெயரிட்டுள்ளார். இத்திட்டத்திற்கு வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட உள்ள நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி உரிமைத்தொகை மக்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்பும் முறை குறித்த வழிமுறைகளை இப்பதிவின் மூலம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

kalaingar urimaithogai Application Filling Procedure Tamil

விண்ணப்பத்தின் ஆரம்பத்திலேயே விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களை இதனுடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக விண்ணப்பத்தில் பயனாளியின் ஆதார் எண், அவரின் பெயர், குடும்ப அட்டையின் எண், திருமண நிலை, தொலைபேசி எண், தற்போது வாடகை அல்லது சொந்த வீட்டில் வசிக்கும் நபரா, அவரின் வீட்டின் மின் இணைப்பு எண், கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயர், வங்கிக் கிளையின் பெயர், வங்கி கணக்கு எண்

அதனை தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் அவர்களின் வயது, தொழில், மாத வருமானம் மற்றும் வருமான வரி செலுத்தும் விவரங்கள் இதன் பிறகு குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளதா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யாரிடமாவது கார், ஜீப் , டிராக்டர் போன்ற கனரக வாகனங்கள் உள்ளதா என்பது போன்ற விவரங்களை குறிப்பிட்டு மேலே குறிப்பிட்ட ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பம் PDF Download

See also  மத்திய அரசின் சூப்பர் திட்டம்.. மாதம் பிறந்தால் 5000 ரூபாய் ஊக்கத்தொகை இளைஞர்கள் சேருவது எப்படி? how to join national youth volunteer central government scheme

Leave a Comment

error: Content is protected !!