வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் டிசம்பர் 2023 மற்றும் வங்கி விடுமுறை Bank working days December 2023 Tamilnadu be prepared Bank strike

Bank working days December 2023 Tamilnadu

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் டிசம்பர் 2023 மற்றும் வங்கி விடுமுறை

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் வங்கி விடுமுறைகள் காரணமாக டிசம்பர் மாதத்தில் வங்கிகள் அதிக நாள்கள் செயல்படாத நிலை ஏற்படவுள்ளது. Bank working days December 2023 Tamilnadu

வங்கி ஊழியர்களின் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக பல வங்கிகள் செயல்படாது என்றாலும், செல்போன் மற்றும் இணைய வழி செயல்பாடுகள் மூலம் வங்கிச் சேவைகள் தடையின்றி செயல்படும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join
Bank working days December 2023 Tamilnadu
Bank working days December 2023 Tamilnadu

வங்கி ஊழியர்களின் சங்கங்கள், டிசம்பர் மாதம் 6 நாள்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், அனைத்து வங்கி ஊழியர்களும் ஒரே நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) 6 நாள்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, டிச.4 முதல் டிச.11 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும் போதுமான ஆள்சேர்ப்பு கோரியும் மற்றும் நிரந்தர பணியிடங்களுக்கான வேலைகளை மூன்றாம் நிறுவனத்திற்கு கொடுப்பதை எதிர்த்தும் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

Bank strike December 2023

வேலைநிறுத்தத் தேதிகள்:

டிசம்பர் 4: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகியவற்றில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 5: பாங்க் ஆப் பரோடா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 6: கனரா வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 7: இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கியில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 8: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 11: அனைத்து தனியார் வங்கிகளிலும் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் அவரது எக்ஸ் பக்கத்தில் 2019 முதல் 2023 வரை வேலைவாய்ப்பின்மை கணிசமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

See also  அதிர்ச்சி! தமிழகத்தில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது 2023 Increase in Registry Service Fees

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அறிவிப்பின்படி, அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.

Bank Holidays in December 2023

Bank Strike and holiday December 2023
Bank Strike and holiday December 2023

ரிசர்வ் வங்கியின் பட்டியலின்படி, 2023 டிசம்பரில் 11 நாள்கள் வரை வங்கிகள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் வார இறுதி நாள்களின் விடுமுறை மட்டும் 7 நாள்கள் ஆகும்.

நாடு முழுவதும் டிசம்பர் மாதத்தில் மட்டும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம், பண்டிகை விடுமுறைகள், வார இறுதி நாள்கள் விடுமுறை என 24 நாள்கள் வரை செயல்படாத நிலை ஏற்படவுள்ளது.

மாநில தொடக்க நாள்/சுதேசி நம்பிக்கை நாள்: டிசம்பர் 1
புனித பிரான்சிஸ் சேவியரின் விழா: டிசம்பர் 4
பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா: டிசம்பர் 12
லோசூங்/நம்சூங்: டிசம்பர் 13
லோசூங்/நம்சூங்: டிசம்பர் 14
U SoSo Tham இறந்த ஆண்டு: டிசம்பர் 18
கோவா விடுதலை நாள்: டிசம்பர் 19
கிறிஸ்துமஸ்: டிசம்பர் 25
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: டிசம்பர் 26
கிறிஸ்துமஸ்: டிசம்பர் 27
யு கியாங் நங்பா: டிசம்பர் 30

மேலும், வார இறுதி நாட்களில் வங்கிகள் மூடப்படும் நாட்கள் இவை

டிசம்பர் 3: ஞாயிறு

டிசம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை

SBI Recruitment 2023 Apply online 

RBI website Click

ஆனால், அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் மாநிலங்களில் அறிவிக்கப்படும் விடுமுறை நாள்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் செயல்படும்.
செய்திகள் உடனுக்குடன்.

Leave a Comment

error: Content is protected !!