2வது நாளாக இன்றும் போக்குவரத்து துறை வேலை நிறுத்தம் தொடரும் Bus strike continued in 2nd day in tamilnadu 

Bus strike continued in 2nd day in tamilnadu 

2வது நாளாக இன்றும் போக்குவரத்து துறை வேலை நிறுத்தம் தொடரும்

2வது நாளாக இன்றும் போக்குவரத்து துறை வேலை நிறுத்தம் தொடரும் என்று போக்குவரத்து துறை தொழிலாளர் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Bus strike continued in 2nd day in tamilnadu 
எனவே இன்றும் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே பொதுமக்கள் அதற்கு ஏற்ற போல் தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழக போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், Jan 9th bus strike in tamilnadu latest News in tamil

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்க பேரவை. ஐஎன்டியுசி உள்ளிட்ட 26 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொிவித்து இருந்தன.

Bus strike continued in 2nd day in tamilnadu 
Bus strike continued in 2nd day in tamilnadu

Bus Strike Tamil nadu Latest News

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. ஏற்கனவே இரண்டு, மூன்று முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த சங்கங்களை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் நாளை பணியில் ஈடுபடுவர் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், தொழிற்சங்கங்களிடம் உறுதியாக தெரிவித்தும் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இரண்டு கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளதால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் போக்குவரத்து துறை உயரதிகாரிகள், காவல்துறையினர் பங்கேற்றுள்ளனர்

நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தொமுச உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்களை கொண்டு வழக்கம் போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

See also  வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் டிசம்பர் 2023 மற்றும் வங்கி விடுமுறை Bank working days December 2023 Tamilnadu be prepared Bank strike

Bus strike continued in 2nd day in tamilnadu Bus strike continued in 2nd day in tamilnadu 

இதனிடையே, அமைச்சா் சிவசங்கா் கூறுகையில், “தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடு செய்து தரப்படும். தொமுச உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைச் சோ்ந்த போக்குவரத்து ஊழியா்களை வைத்து நாளை வழக்கம் போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் 2 கோரிக்கைகள் ஏற்பு. மேலும் 4 கோரிக்கைகள் குறித்து பொங்கலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளோம்” என்று தொிவித்துள்ளாா்.

Leave a Comment

error: Content is protected !!