மார்ச் 21ஆம் தேதி பொது தேர்வு நடக்குமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
Tiruvarur District Local Holiday March 21
Tiruvarur District Local Holiday March 21 திருவாரூர் ஆழி தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மார்ச் 21ஆம் தேதி நடைபெறும் பதினோராம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் வெளியிட்டுள்ளார்.
Join our Groups | |
join | |
Telegram | Join |
மார்ச் 21ஆம் தேதி பொது தேர்வு நடக்குமா?
திருவாரூர் மாவட்டம் தியாகராஜ கோவில் ஆழி தேரோட்டமானது உலகப் புகழ்பெற்ற திருவிழாவாகும் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வ தோஷ பரிகார தளமாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலின் பங்குனி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது .அதன் நிறைவாக ஆழி தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் பெறுவார்கள்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்பதால் அதைப் பார்க்க வெளி மாநிலங்களிலும் இருந்து அதிகமான மக்கள் வருவார்கள் எனவே இந்த ஆண்டு தேரோட்டம் வருகிற மார்ச் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மார்ச் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் அதனால் 11-ஆம் வகுப்பு பொது தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அவர்கள் தெரிவித்துள்ளார்.