Today School leave news in tamil
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Today School leave news in tamil தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை (School Holiday) அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
School leave News Today 14.11.2023
Join our Groups | |
join | |
Telegram | Join |
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகி இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று சென்னை வானிலை அறிவித்து இருந்தது கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்
செங்கல்பட்டு காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எந்த நிலையில்
இன்று பள்ளி கல்லூரி விடுமுறை 14.11.2023
கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை, மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு.
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தொடர்மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று (14.11.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா.
தொடர்மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று (14.11.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்.
கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ.
கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
கனமழை எச்சரிக்கை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
கன மழை காரணமாக இன்று (14/11/23,)புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.- கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காரணம் மிக கனமழை ஓரிரு மாவட்டங்களில் பெரிய அதிக அளவு வாய்ப்புள்ளதால் இந்த விடுமுறையானது மேலும் நீட்டிக்க படலாம் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது மற்ற மாவட்டங்களின் விடுமுறை பற்றிய தகவல்கள் உடனுக்குடன் இதில் நேரலையாக பதிவிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
School Leave News in Tamil nadu
குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு குறித்த செய்திகள் உடனுக்குடன் இதில் பதிவு செய்யப்படும்.