பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு  திட்டம் Mahila Samman Savings Certificate 2023 மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்

Mahila Samman Savings Certificate 2023 -MSSC மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்

Mahila Samman Savings Certificate 2023 (MSSC)

Mahila Samman Savings Certificate 2023 (MSSC) பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு  திட்டம் Mahila Samman Savings Certificate 2023 -MSSC மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் புதிய திட்டமும் அமுலுக்கு வந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள்.

Mahila Samman Savings Certificate 2023
Mahila Samman Savings Certificate 2023

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்

  1. அனைத்துபெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் இந்த திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள். தனி நபர் கணக்குகள் மட்டுமே துவங்க முடியும். (No Agency Service /  முகவர் மூலம் துவஙும் வசதி இல்லை )
  2. இந்த சேமிப்பு திட்டம் என்பது 31.03.2025 வரை மட்டும் அமுலில் இருக்கும்.
  3. குறைந்த பட்ச முதலீட்டு தொகை என்பது Rs 1000/- ரூபாய் 100/-ன் மடங்குகளாக இருக்க வேண்டும். அதிகபட்சம் Rs 2/- Lakhs .
  4. ஒருவர் எத்தனை கணக்குகளும் துவங்க முடியும். ஆனால் ஒரு கணக்கு துவங்கி 3 மாதங்கள் ஆன பின்னர் மட்டுமே அடுத்த கணக்கினை துவங்க முடியும்.
  5. முதலீட்டுக்கு 7.5 % காலாண்டுக்கு ஒரு முறை கூட்டு வட்டி வட்டி தொகை என்பது அதே கணக்கில் சேர்க்கப்படும்.
  6. கணக்கு துவங்கி ஓராண்டிற்கு பிறகு அப்போதைய இருப்பு தொகையில் 40% வரை withdrawal செய்ய முடியும்.
  7. முதிர்வு காலம் என்பது 2 ஆண்டுகள்.
  8. கணக்குதாரர் இறந்ததாலோ, அல்லது Guardian இறந்ததாலோ அல்லது கணக்குதாரர் கடும் நோய்வாய்பட்டாலாலோ உரிய ஆவணங்களை சமர்ப்பித்து எப்போது வேண்டும் என்றாலும் PMC செய்ய முடியும். இதற்க்கு இந்த திட்டத்திற்கு உரிய வட்டி (7.5%) கிடைக்கும்.
  1. Normal PMC – கணக்கு துவங்கி 6 மாதங்கள் கழித்து PMC செய்ய முடியும். இதற்கு குறைக்கப்பட்ட வட்டி 5.5 கிடைக்கும்.
  2.  இதில் கணக்கு துவங்க புதிய படிவங்கள் கிடைக்கும் வரை தற்போதைய AOF பயன் படுத்தி கொள்ளலாம். தற்போதய AOF ல் உள்ள உச்சபட்ச வரம்பு தொகை என்ற declaration என்ற பகுதியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் 2/3
  3. அனைத்து அஞ்சல் அலுவலகங்கலும் இந்த கணக்கு துவங்க முடியும். BO வில் மட்டும் cheque அல்லது SB 7 மூலம் மட்டுமே துவங்க முடியும். Cash மூலம் துவங்க முடியாது. எனினும் RICT device ல் உரிய மாற்றங்கள் கொண்டு வர சில காலம் பிடிக்கும்.
  4. PMC / Closure இவற்றை Finacle <MIS / TD கணக்குகளுக்கு உரிய மெனு மூலம் செய்ய முடியும். Withdrawal உரிய வழி முறைகள் menu ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.
See also  மத்திய அரசின் சூப்பர் திட்டம்.. மாதம் பிறந்தால் 5000 ரூபாய் ஊக்கத்தொகை இளைஞர்கள் சேருவது எப்படி? how to join national youth volunteer central government scheme

Mahila Samman Savings Certificate 2023 -MSSC

Type of Account and Deposit:

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

(i) இந்தத் திட்டத்தின் கீழ்  ஒரு தனிப்பட்ட  பெண்ணுக்கு கணக்கு தொடங்கலாம். (Only for girl child / Woman)

(ii) On or before 31.03.2025 ஒரு பெண் தனக்காகவோ அல்லது மைனர் பெண்ணின் சார்பாக பாதுகாவலராகவோ ஒரு individual கணக்கைத் துவங்கலாம்.

(iii) குறைந்தபட்சம் Rs 1000/- மற்றும் நூறு ரூபாய்களின் மடங்குகளில் அதிகபட்சம் Rs.2,00,000/- வரை ஒரு கணக்கில் டெபாசிட் செய்யலாம்.

Note : Single Deposit only, No further deposits in same account. (It’s like fixed deposit).

(iii) Maximum deposit ரூ 2 lakhs per account per person. (அதாவது ஒரு தனி நபர் எத்துனை accounts வேண்டுமானாலும் துவங்கலாம் ஆனால் மொத்த தொகை maximum Rs. 2 lakhs மட்டுமே அல்லது ஒரே account open செய்து that maximum amount ஆன Rs. 2 lakhs யும் single Deposit ஆக கூட போட்டு கொள்ளலாம்)

ஆனால் தற்போதுள்ள கணக்கிற்கும் மற்றொரு கணக்கைத் திறப்பதற்கும் இடையே மூன்று மாத கால இடைவெளி வேண்டும்.

எடுத்துக்காட்டாக, 05.04.2023 அன்று ஒரு நபர் Rs 50000/- கொடுத்து கணக்கைத் தொடங்கியதாக வைத்துக் கொண்டால் , மீதித் தொகையான ரூ150000/- யை 05.07.2023 அன்று அல்லது அதற்குப் பிறகு தான் கொடுத்து another new account open செய்ய முடியும்.

(Note : Not possible to open multiple accounts at a time )

Mahila Samman Savings Interest

(i) இந்தத் திட்டத்தின் கீழ் வைப்புத்தொகைகளுக்குப் பொருந்தும் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.5 சதவீதம். வட்டியானது காலாண்டு அடிப்படையில் compound interest ஆக கணக்கில் வரவு வைக்கப்படும்.

(ii) இந்தத் திட்டத்திற்கு முரணாக, துவக்கப்பட்ட அல்லது பராமரிக்கப்படும் கணக்கிற்கு  POSB Interest மட்டுமே வழங்கப்படும்.

Withdrawal from Account:

(i) கணக்கு வைத்திருப்பவர், கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடம் காலாவதியான பிறகு, ஆனால் கணக்கு முதிர்ச்சியடைவதற்கு முன் (before completion of two years), பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பம் செய்வதன் மூலம், தகுதியான இருப்பில் அதிகபட்சமாக 40 சதவீதம் வரை திரும்பப் பெறத் தகுதியுடையவர்.

(ii) ஒரு மைனர் பெண்ணின் சார்பாக கணக்கு தொடங்கப்பட்டால், காப்பாளர் பின்வரும் சான்றிதழை அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் மைனர் பெண்ணின் நலனுக்காக பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்: –

      Certified that the amount sought to be withdrawn is required for the use and welfare of Miss/Kumari …………………………………… who is a minor girl and is alive on this …………….. day ……………. of …………(month) …………. (year).

Payment of Maturity:

கணக்கு துவங்கிய நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் கணக்கு முதிர்ச்சியடையும்.

Premature Closure:

(i) பின்வரும் நிகழ்வுகளைத் தவிர, முதிர்வுக்கு முன் கணக்கை close செய்ய இயலாது.

அதாவது: –

 கணக்கு வைத்திருப்பவரின் மரணம்.

கணக்கு வைத்திருப்பவரின் உயிருக்கு ஆபத்தான நோய்களில் மருத்துவ உதவி அல்லது பாதுகாவலரின் இறப்பு, இவற்றின் முழுமையான ஆவணங்களுக்குப் பிறகு – எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

Mahila Samman Savings Certificate 2023
Mahila Samman Savings Certificate 2023

பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு  திட்டம் 2023

குறிப்பு: –

முன்கூட்டியே கணக்கு மூடப்பட்டால், கணக்கு வைத்திருப்பவர்/ பாதுகாவலரிடமிருந்து விண்ணப்பம் மற்றும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழுடன் பெறப்பட வேண்டும் அல்லது பாதுகாவலரின் இறப்புச் சான்றிதழைப் பெற வேண்டும்.

கணக்கு வைத்திருப்பவரின் மரணம் தொடர்பாக  ஒரு கணக்கு முன்கூட்டியே மூடப்பட்டால், கணக்கு வைத்திருக்கும் திட்டத்திற்கு பொருந்தக்கூடிய 7.5% விகிதத்தில் அசல் தொகைக்கான வட்டி செலுத்தப்படும்.

கணக்கு வைத்திருப்பவரின் மரணம் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும், பரிந்துரைக்கப்பட்ட படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம், கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்கள் முடிந்த பிறகு, எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே மூடுவது அனுமதிக்கப்படலாம். அவ்வாறு close செய்யும் account க்கு 5.5 % வட்டி விகிதத்திற்கு மட்டுமே தகுதியுடையதாக இருக்கும்.

See also  மீண்டும் இல்லம் திட்டம் 2023 கல்வி உதவித் தொகை இருமடங்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு Mintum Illam Tittam 2023 Apply now
Mahila samman savings Certificate Interest Table
Mahila samman savings Certificate Interest Table

 Private School free Admission 2023 -24 Full Details in tamil

India Post website link

Leave a Comment

error: Content is protected !!