மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மீண்டும் விநியோகம்!- மிஸ் பண்ணிடாதீங்க!
Kalaignar Magalir Urimai Thogai Apply Form Distribute
Kalaignar Magalir Urimai Thogai Apply Form Distribute : தமிழக அரசு கலைஞர் மகளிர் தொகை திட்டத்தை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்படுத்தி வருகிறது. 2023 ஆம் ஆண்டு ஜூலை குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் ஆனது வழங்கப்பட்டு 1.63 கோடி பேர் பதிவு செய்தனர் மேலும் அரசு அறிவித்த விதிமுறைகளின் அடிப்படையில் தகுதி உள்ள 1.15 கோடி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

Kalaignar Urimai Thogai Apply Form Distribute
இந்த திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்ப படிவம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று தற்போது ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தனி குடும்ப அட்டை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு மக்கள் விண்ணப்பித்து வருவதாக உளவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Join our Groups | |
join | |
Telegram | Join |
Kalaignar Urimai Thogai
இந்நிலையில் புதிய பயனாளர்களை மூன்று மாதங்களுக்குள் இணைத்து மாதம் தோறும் 1500 ரூபாய் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் திட்டம் தொடங்கப்பட்டது போல், ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளில் உரிமைத் தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.