TNPSC நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் – Happy News TNPSC Group 4 Online Coaching Classes

TNPSC Group 4 Online Coaching Classes

TNPSC நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள குரூப்  4க்கான (Group IV) தகுதித் தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. TNPSC Group 4 Online Coaching Classes இந்த தேர்வுகளில் அதிக அளவில் ஊரகப்பகுதி மாணவர்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற வசதிவாய்ப்பற்ற மாணவர்கள் கலந்துக்கொண்டு தேர்ச்சி பெறும் வகையில் அண்ணா நிர்வாகப்பணியாளர் கல்லூரியில் இணையத் தள பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, சீரிய முறையிலும், தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டும் இணைய வழிப்பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

TNPSC Group 4 Online Coaching Classes
TNPSC Group 4 Online Coaching Classes

எனவே, தகுதி வாய்ந்த அனைவரும், தங்களிடமுள்ள செல்போன் (Smart Phone) வாயிலாக இந்த இணைய வழி வகுப்புகள் மூலம் இலவசமாக  பாடங்களைக் கற்று தகுதித்தேர்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி II மற்றும் IIA மற்றும் தொகுதி I பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அண்ணா நிர்வாகப்பணியாளர் கல்லூரியின் இணைய வழி வகுப்புகளாக நடைபெற்று வருகிறது. இதனை பயன்படுத்தி அதிகளவிலான கிராமப்புற மற்றும் எளிய மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp   join
TelegramJoin

Government Job Júnior Assistant, Typist Apply online 

TNPSC Group 4 Online Coaching Class Start

டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வு பயிற்சி வகுப்புகளை இணைய வழியில் ஒளிபரப்பு செய்ய உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம், இந்த ஆண்டு திட்டப்படி, குரூப் – 4 தேர்வுகளை விரைவில் அறிவிக்க உள்ளது. இந்தத் தேர்வை, ஊரகப்பகுதி மாணவர்கள் அதிகம் பேர் எழுத வசதியாக, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரியில், இணையதள பயிற்சி வகுப்புகள், இம்மாதம், 13ம் தேதி துவங்கின. பயிற்சி வகுப்புகள், ‘AIM TN‘ வலைதள பக்கம், ‘யு டியூப்’ சேனலில் ஒளிபரப்பாகின்றன.

TNPSC Group 4 Online Class Schedule PDF Link

TNPSC Group 4 Online Class Schedule PDF Click

டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வு எழுத உள்ளவர்கள், தங்களிடம் உள்ள ஸ்மார்ட் போன் வழியாக, இந்த இணைய வழி குரூப் – 4 தேர்வு பயிற்சி வகுப்பில், இலவசமாக பாடங்களை கற்று, தகுதி தேர்வில் பங்கேற்கலாம். பாடத்திட்டங்களை தொகுதி வாரியாக வடிவமைத்து, தினமும் நடத்தப்படும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரி தேர்வு நடத்தி, அதை மதிப்பீடு செய்து முடிவுகள் வெளியிடப்படும். ஞாயிற்றுக்கிழமை நேரலையில் வினாத்தாள் குறித்த விவாதம் நடக்கும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

See also  12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு 2023 - 12th Orginal Marksheet 2023 release date Tamil nadu Happy
Aim YouTube Channel Link

Youtube Link

Leave a Comment

error: Content is protected !!