10ம் வகுப்பு பிறகு என்ன படிக்கலாம்? After 10th What to study?

10ம் வகுப்பு பிறகு என்ன படிக்கலாம்?

After 10th What to study

After 10th What to study 10ம் வகுப்பு பிறகு என்ன படிக்கலாம்? பத்தாம் வகுப்புக்குப் பிறகு எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பதே வாழ்க்கையைத் தீர்மானிக்க முக்கியக் காரணியாக இருப்பதால், கவனத்துடன் வாய்ப்புள்ள துறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

after 10th what to study
after 10th what to study

What Next After 10th “பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்ல, தேர்ச்சி பெறாதவர்களும் மேற்கொண்டு படிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன” .

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join
Tamilanzone Whatsapp Group link  Join
TN Education News Whatsapp Group Link Join

 

“பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மூன்று வழிகளில் மேற்படிப்பைத் தொடரலாம்” என்று சொல்லி ஒவ்வொரு வழிமுறையையும் விவரித்தார்.

முதல் வழி: What Next After 10th படித்து முடித்து குறுகிய காலத்தில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்கள், ஐ.டி.ஐ-கல்வி நிறுவனங்களில் சான்றிதழ் படிப்பில் சேரலாம். இங்கு ஓராண்டுப் படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பைப் பெறலாம். இதில் எலெக்ட்ரீஷியன், கம்ப்யூட்டர் மெக்கானிக், ஏ.சி மெக்கானிக் என ஏகப்பட்ட பிரிவுகள் உள்ளன. தற்போது ஐ.டி.ஐ-யில் சேர போட்டி குறைவு. மேலும், இங்கு திறன் மேம்பாட்டுக்கான ஏராளமான படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. இதில் சேர்ந்து படிப்பவர்களுக்குச்  சொந்தமாகத் தொழில் தொடங்கவும், வங்கிக் கடனுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இரண்டாவது வழி: What Next After 10th டிப்ளோமா படிப்பில் சேர்வது. பொறியியல் கல்லூரியில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றனவோ அத்தனை படிப்புகளும் டிப்ளோமாவிலும் உண்டு. மூன்று ஆண்டுகள் டிப்ளோமா படிப்பைப் படித்து முடித்தவுடன் வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெறலாம். தமிழ்நாட்டில் நிறைய அரசு பாலிடெக்னிக்குகள் உள்ளன. இங்கு குறைந்த கட்டணத்தில் படித்து முடிக்கலாம். படிப்பை முடித்தவுடன் பொறியியல் சார்ந்த நிறுவனங்களில் எளிதாக வேலைவாய்ப்பைப் பெற முடியும். மூன்றாண்டு வேலை அனுபவத்துடன் பகுதி நேர பி.இ. / பி.டெக் படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

after 10th what to study

மூன்றாவது வழி: What Next After 10th டிகிரி படிக்கத் திட்டமிட்டிருக்கும் மாணவர்கள், 11-ம் வகுப்பில் சேரலாம். இந்த வழியைத்தான் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் 68 பாடங்களும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 102 பாடங்களும் இருக்கின்றன. ஆனால், ப்ளஸ் 1 சேர்பவர்கள் முக்கியப் பாடங்களைக்கொண்ட நான்கு பாடப்பிரிவுகளில்தான் அதிகளவில் சேர்கின்றனர்.

See also  டிப்ளமோ தேர்வு அட்டவணை 2023 Diploma Exam Time Table 2023 Tamil nadu PDF Download Now

After 10th What to study

1 . மேல் நிலைப் பள்ளி (+1,+2) படிப்பு :

அ. after 10th joint to 11th course  First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பியல், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.

இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது.

what is doing after 10th எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிப்பிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருவது மிகவும் சிறந்தது.

after 10th what to study

ஆ. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு :

after 10th joint to 11th course பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). மருத்துவத் துறை தவிர்த்து மற்ற பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூப் கல்வியை தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.

இ. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு :

what is doing after 10th மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது

ஈ. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு :

after 10th joint to 11th course B.Com, CA (Charted accountant ), M.Com படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த குருப் கல்வியை தேர்ந்தெடுக்கலாம். அரசு வேலை, Accountancy துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.

உ. வரலாறு, பொருளாதாரவியல் :

after 10th joint to 11th course எதிர்காலத்தில் B.A., M.A., படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

ஊ. Vocational குரூப் :

what is doing after 10th தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.

See also  பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு? வெயில் காரணமாக school reopen date today news 2023
After 10th What to study

II. பட்டய படிப்பு (டிப்ளோமா):

இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பத் துறைகள் , மருத்துவத் துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil etc… போன்ற துறைகள் சிறந்த துறைகள். மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன. டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ).

12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.

மாணவர்கள், தங்களுடைய திறனுக்கும் மனநிலைக்கும் ஏற்றாற்போல படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், பெரும்பாலானோர் மதிப்பெண் அடிப்படையில் படிப்பைப் தேர்ந்தெடுக்கும் வழக்கம் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கும்போது வேலைவாய்ப்பை வழங்கும் படிப்புகளாகவும், வளர்ச்சி உள்ள துறைகளையும் மனதில்வைத்து விரும்பமுள்ள படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒருவேளை பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், கவலைப்படவேண்டியதில்லை. ஐ.டி.ஐ-யில் சான்றிதழ் படிப்பில் சேர முடியும். ஆகையால், எந்தவிதமான கவலையும் வேண்டாம். தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் மாதம் இறுதியில் சிறப்புத் தேர்வு நடத்தவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது”

Leave a Comment

error: Content is protected !!