Jailer Movie Review In Tamil
எப்படி இருக்கு? ரஜினியின் ஜெயிலர் திரைப்படம்
Jailer Movie Review In Tamil சில இடங்களில் படம் தோய்வை கொடுத்தாலும் நெல்சன் இம்முறை நம்மை முழுமையாக ஏமாற்றவில்லை.
மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
Join our Groups | |
join | |
Telegram | Join |
முதல் காட்சி: தமிழ்நாட்டில் அதிகாலை காட்சி திரையிடப்படவில்லை. 9 மணிக்குத்தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதேசமயம் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. அங்கிருக்கும் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்தனர். திரையரங்குக்குள் இருந்தபடி புகைப்படத்தையும் தங்களுடைய ட்விட்டர் பகக்த்தி பகிர்ந்துவந்தனர்.
தமிழ்நாட்டு ரசிகர்கள்: 9 மணிக்கு இங்கு முதல் காட்சி திரையிடப்பட்டாலும் ரசிகர்கள் அதற்கு முன்னதாகவே திரையரங்குகளுக்கு முன்னர் குழும ஆரம்பித்தனர். ஒருவழியாக 9 மணிக்கு முண்டியடித்து தியேட்டருக்குள் சென்றவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று பெயர் வரும் இடத்திலேயே கரகோஷம் எழுப்பி, விசில் அடித்து கொண்டாடினார். இந்தச் சூழலில் படத்தின் முதல் பாதி குறித்த விமர்சனம் தெரியவந்திருக்கிறது.
எப்படி இருக்கிறது முதல் பாதி: ஏற்கனவே தகவல் வெளியானபடி தன்னுடைய மகனை காப்பாற்ற போராடும் தந்தையின் கதைதான் ஜெயிலர் ஒன்லைன் என்பது உறுதியாகியிருக்கிறது. நேர்மையான காவல் துறை அதிகாரியாக இருக்கும் வசந்த் ரவி ஒரு சட்டத்திற்கு விரோதமான செயலை (என்னவென்று படம் பார்த்து தெரிந்துகொள்ளலாமே) தடுக்க முயல்கிறார். அது அவருக்கும், வில்லனுக்குமான மோதலாக விரிகிறது.
ரொம்ப ஸ்லோ: அந்த மோதலால் வசந்த் ரவி கடத்தப்படுகிறார். கட்டத்தப்பட்ட ரவி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாமல் அவரை காப்பாற்ற ரஜினிகாந்த் போராடும்படி முதல் பாதி செல்கிறது. நெல்சன் திலீப்குமார் வழக்கமான தனது டார்க் காமெடியை இதிலும் தூவியிருக்கிறார். அது சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகவில்லை என ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள்.
குறிப்பாக படத்தின் முதல் பாதியில் வெகுநேரம் ரொம்ப ஸ்லோவாக செல்கிறது என்கின்ற ஒரு கருத்தும் தியேட்டரிலிருந்து கேட்கிறது. அதேசமயம் புயலுக்கு முன் ஒரு அமைதி இருக்குமே. அப்படித்தான் அந்த அமைதி. அதுவரை ஒரு குடும்பஸ்தனாக பொறுப்புள்ள கணவனாக,தகப்பனாக இருக்கும் முத்துவேல் பாண்டியன் தனது குடும்பத்தை ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு வில்லன்களிடம் மோதும்போது புலியாக மாறி சீறுகிறார்.
அந்த சீன்தான் இடைவேளை காட்சி. அந்தக் காட்சியில் ஒட்டுமொத்த தியேட்டரும் தெறிக்கிறது. ரஜினிக்கான உச்சக்கட்ட மாஸ் காட்சி அதுதான் என கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். அதனால் முதல் பாதி தங்களுக்கு திருப்தி தந்ததாகவும் கூறுகின்றனர். அதற்கு பிறகு முத்துவேல் பாண்டியனுக்கு ப்ளாஷ்பேக்கும், மகன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கான விடையும் இரண்டாம் பாதியில் இருக்கிறது.
கதையின் கரு:
போலீஸ் மகன், குறும்பு பேரன், ஓய்வு காலம் என கடைசி கால வாழ்க்கையை வாஞ்சையோடு வாழ்ந்து வருகிறார் ரஜினி. இந்த நிலையில்தான் சிலைக்கடத்தல் பிரச்சினை ஒன்றில் ரஜினியின் மகன் கேங்ஸ்டர் ஒருவரை பொளந்து கட்டுகிறார்.
இதனைப்பார்த்து கொதித்து எழுந்த கேங்க்ஸ்டர் தலைவன், ரவியை கொன்று விட்டதாக காட்சிப்படுத்த படுகிறது. இதைக்கேட்டு நொந்து போன ரஜினி தன்னுடைய பழைய முகத்தை காட்டுகிறார்.
கடைசியாக கேங்ஸ்டர் தலையை வெட்ட ரஜினி செல்லும் கடைசி நொடியில் மகன் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி அவருக்கு கிடைக்கிறது. ஆனால் மகனை திரும்ப ஒப்படைக்க கேங்ஸ்டர் டீல் ஒன்றை பேச, அதனை செய்து முடிக்க களத்தில் இறங்குகிறார் ரஜினி அதன் பின்னர் என்ன ஆனது என்பது மீதிக்கதை.
குறும்பு தாத்தா, கொதித்து எழும் அப்பா, மிரட்டல் ஜெயிலர் என நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார். அவ்வப்போது அவர் அடிக்கும் நெல்சன் டச் காமெடிகளும் ரசிக்க வைக்கின்றன. .
அவருக்கு அடுத்ததாக கவனம் ஈர்ப்பவர் வில்லன் விநாயகன். வில்லனிசத்தில் அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு வேறுரகம். மற்ற முக்கிய நடிகர்கள் அனைவருக்கும் கெஸ்ட் ரோல் தான். ஆனாலும் அவர்களுக்கான மாஸ் அவர்கள் இடம் பெற்று இருக்கும் காட்சிகளில் இடம் பெற்று இருக்கிறது.
இதில் சுனிலுக்கு மட்டும் கொஞ்சம் வித்தியாசமான ரோல். அதை அவர் கன கச்சிதமாக செய்து இருக்கிறார். நெல்சன் ஸ்டைல் பிளாக் காமெடிகள் அனைத்தும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆனால் அவர் காட்டி இருக்கும் வைலன்ஸ் கொஞ்சம் ஆச்சரியம்.
ரஜினி மாஸ் மொமண்டுகள் அனைத்தையும் நெல்சன் தனக்கான பாணியில் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக அவர் ரஜினியை ஜெயிலர் லுக்கில் காண்பித்தது மிரட்டல். அனிருத்தின் இசை படத்தை தூண் போல தாங்கி நிற்கிறது. சில இடங்களில் படம் தோய்வை கொடுத்தாலும் நெல்சன் இம்முறை நம்மை முழுமையாக ஏமாற்றவில்லை.