World Cup Final 2023 : இந்திய அணி ஃபைனலில் தோற்க முக்கிய காரணங்கள் The main reasons why Indian team lost in the ICC World Cup 2023

The Main Reasons why Indian team lost in the ICC World Cup 2023

இந்திய அணி ஃபைனலில் தோற்க முக்கிய காரணங்கள்

ICC World Cup Final 2023  நடப்பு தொடரில் தோல்வியே காணாத இந்திய அணி இறுதி போட்டியில் சறுக்கியதற்கான முக்கிய காரணங்களை தற்போது பார்க்கலாம் The Main Reasons why Indian team lost in the ICC World Cup 2023.

அகமதபாத் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி கோப்பையை 3வது முறையாக கைகளில் ஏந்தும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவை ஆஸ்திரேலிய அணி சுக்குநூறாக தகர்த்தது. சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது. 241 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 43 ஓவர்கள் எட்டியது. நடப்பு தொடரில் தோல்வியே காணாத இந்திய அணி இறுதி போட்டியில் சறுக்கியதற்கான முக்கிய காரணங்களை தற்போது பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join
The Main Reasons why Indian team lost in the ICC World Cup 2023
The Main Reasons why Indian team lost in the ICC World Cup 2023

டாப் ஆர்டர் சொதப்பல் : உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக இருந்ததே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி என மூவருமே ரன் வேட்டையில் இறங்கி எதிரணியை கலங்க அடிக்க செய்வார்கள். ஆனால் இறுதி போட்டியில் அவர்களது பேட்டிங் ரசிகர்களுக்கு அதிரச்சியாகவே அமைந்தது. விராட் கோலியின் அரைசதம் மட்டுமே யானை பசிக்கு சோளப் பொறியாக இருந்தது.

மிடில் ஆர்டர் பார்ட்னர்ஷிப் : இந்திய அணியின் முதுகெலும்பாக இருந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் ஆஸ்திரேலிய பந்துவீச்சு சிதைத்துவிட்டது. இந்திய அணியை பார்ட்ன்ஷிப் அமைக்காவிடமால் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை சாய்த்து திணறவைத்தனர். கே.எல்.ராகுல் விக்கெட்டை இழக்க கூடாது என்பதற்காக ஸ்லோ பேட்டிங் செய்தது ரன்ரேட்டை குறைக்க மட்டுமே உதவ செய்தது. சூர்யாகுமார் யாதவ் அதிரடி கானல் நீராகவே இருந்தது.

பிரகாசிக்காத சூர்யகுமார் யாதவ் : உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றதால் Playing XI-ல் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக அஸ்வின் இடம்பெறுவார் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொற்பனமாக இருக்கும் அஸ்வினை கடைசி வரை வாட்டர் பாயாக மட்டுமே பயன்படுத்தி வீணடித்துவிட்டனர். சூர்யகுமார் யாதவை அணியில் எதற்கு எடுத்தார்கள் என்ற கேள்விக்கு கடைசி வரை பதில் கிடைக்காமல் போனது.

See also  ஒரு நாளைக்கு ரூ.8000 சம்பளம் உடனே விண்ணப்பிங்க Oil India Limited Recruitment 2023 Domain expert Job Apply

ப்லிடிங்கில் கோட்டை கட்டிய ஆஸி : அகமதாபாத் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் ஃப்ல்டிங்கை பார்த்து அனைவரும் பிரமித்து விட்டனர். பந்து எங்கே போனாலும் அங்கு ஒரு ஃப்ல்டர் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் ஃப்ல்டிங் வியூகம், எந்த ஒரு பந்தையும் தவறவிடாத நேர்த்தி என ஒரு இடத்திலும் ரன்னை அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. சுமார் 40 ரன்கள் அவர்களே தடுத்து நிறுத்தி இருப்பார்கள். நடிகர் மாதவன் கூட ஆஸ்திரேலிய வீரர்கள் 40 பேர் மைதானத்தில் ஃப்ல்டிங் செய்கிறார்களா? எல்லா இடத்திலும் இருக்கிறார்கள் என கருத்து பதிவிட்டு இருந்தார். பவுண்டரிகளுக்கு பந்துகளை போக விடாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அரணாக இருந்து ரன்ரேட்டை கட்டுபடுத்தினார்கள். ஆனால் இந்திய அணியின் ஃப்ல்டிங் வியூகம் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றே சொல்லலாம்.

அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா : பவர் ப்ளேவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 47 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதுமாதிரியான தருணத்தில் மற்ற அணி வீரர்கள் விக்கெட்டை விடமால் இருக்க வேண்டும் என்பதில் தான் குறியாக இருப்பார்கள். ஆனால் ஹெட் இந்திய பந்துவீச்சை சிதறவிட்டு அவர்களின் நம்பிக்கையை முதலில் சிதைத்தார். ஹெட் – லாபுசாக்னே பார்டன்ர் இந்தியாவின் கோப்பை வெல்லும் கனவை தகர்த்தது. அதிரடியை குறைக்காத ஹெட் சதம் கடந்து ஆஸ்திரேலியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

The Main Reasons why Indian team lost in the ICC World Cup 2023
The Main Reasons why Indian team lost in the ICC World Cup 2023

ஏமாற்றம் கொடுத்த சுழல்பந்து : நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்காத ஒரே போட்டி என்றால் அது இந்த போட்டி தான். வேகத்தில் ஒரு பக்கம் சுழலில் ஒரு பக்கம் என இந்திய பவுலர்கள் அச்சுறுத்தி வந்த நிலையில் குல்தீப் மற்றும் ஜடேஜா முழுமையாக 10 ஓவர்கள் விசியும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. 6வது பந்துவீச்சாளர் இல்லாமல் இருந்ததே இந்திய அணியின் தோல்விக்கு மிகப் பெரிய காரணமாக இருந்தது.

TNPSC Group 4 free online Coaching Class Tamil nadu

TNPSC Group 4 latest News tamil

Leave a Comment

error: Content is protected !!