பொங்கல் பரிசு 2024 இன்றைய செய்தி Happy Pongal Parisu 2024 today News Tamil

Pongal Parisu 2024 today News Tamil

பொங்கல் பரிசு 2024 இன்றைய செய்தி

பொங்கல் பரிசு 2024 இன்றைய செய்தி Pongal Parisu 2024 today News Tamil தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்த 2022 ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை ஆகிய 21 பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரொக்கத் தொகை வழங்கப்படவில்லை. அரசின் நிதி நிலையை கருத்தில்க்கொண்டு கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கத் தொகை கொடுக்கப்படவில்லை என்று ஆளுங்கட்சியினர் சொன்னாலும், அதனை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்தனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

இதற்கிடையே, கடந்த 2023 ஆம் ஆண்டு  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

Pongal Parisu 2024 today News Tamil
Pongal Parisu 2024 today News Tamil

2024 பொங்கல் பரிசு

கடந்த 2021 ஆம் ஆண்டு ரூ 2,500 ரொக்க தொகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது பலர் சட்ட சபை தேர்தல் காரணமாக பொங்கல் பரிசு உடன் ரொக்க தொகை வழங்கப்படுகிறது என விமர்சித்தனர். தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தல் எதிர் வரும் நிலையில் பொங்கல் பரிசுக்கான ரொக்க தொகை ரூ 1000 த்திலிருந்து ரூ 2500 என அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.

ரொக்க தொகை உடன் பரிசு பொருட்கள் கிடைக்குமா என பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். மேலும் பொங்கல் பரிசுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 பொங்கல் பரிசு

குடும்பத்துக்கு ரூ.2,500 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு 2024, 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது போல் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
See also  (இன்று முக்கிய தகவல்) சிலிண்டர் விலை குறைந்துவிட்டது பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! TN Gas Cylinder Prices Decreased 2023,Price RS.83.5 Happy News

Leave a Comment

error: Content is protected !!