பொங்கல் பரிசு தொகை ரூ.1000 முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Pongal Gift amount Rs.1000 Chief Minister Stalin’s action order
Pongal Gift amount Rs.1000 Chief Minister Stalin’s action order அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் கூறி இருந்த நிலையில் இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹ 1000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Join our Groups | |
join | |
Telegram | Join |
பொங்கல் பரிசுத் தொகப்பில் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி ,ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, திராட்சை ,முந்திரி, ஏலக்காய் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பரிசு கொடுக்கப்படும்.
பொங்கலானது வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் ₹ 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ,பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி சேலையும் வழங்கப்பட உள்ளது.
எனவே, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்க பணம் தருவதற்கான டோக்கன் விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .இந்த டோக்கன் விநியோக பணியை ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறார்கள் வரும்10ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட உள்ளது விடுபட்டவர்கள் 14ஆம் தேதி அன்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
அனைத்து குடும்ப அட்டைதாரர் பொங்கல் பரிசு தொகுப்பு
மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்த பொருளும் பெறாத அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிவிப்பு தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.