அதிர்ச்சி! மின் கட்டண உயர்வு மத்திய அரசு புதிய அறிவிப்பு Electricity tariff increase

மின் கட்டண உயர்வு மத்திய அரசு புதிய அறிவிப்பு!!

Electricity tariff increase இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் வேளையில் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெயில் காலத்தில் தொழிற்சாலைகளை தாண்டி வீடுகளிலும் மின்சார தேவை அதிகரித்து வரும் வேளையில் மின்சார கட்டணம் பெரிய அளவிலான சுமையாக மாறி வருகிறது

electricity tariff increase
electricity tariff increase

இந்த நிலையில் மத்திய அரசு புதிய மின்சார கட்டண முறையை அறிவித்துள்ளது, இப்புதிய கட்டண முறையின் கீழ் பகல் நேரத்தில் மின் பயன்பாட்டில் 20 சதவீதம் வரை மின் கட்டணத்தை குறைக்கவும், இரவு நேரங்களில் மின் பயன்பாட்டிற்கு 20 சதவீதம் வரை உயர்த்தவும் அனுமதிக்கும் வழியை கொண்டு வந்துள்ளது.

மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும்போது, ​மக்களை ​மின்சாரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இது GRID-ல் peak load அளவை குறைக்கவும், கிரிட்-ன் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் உதவும் என்று மத்திய அரசு நம்புகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி இந்த புதிய கட்டண முறை வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு ஏப்ரல் 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது. இதன் பின் அடுத்த ஒரு வருடத்திற்கு பின்பு வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கும் இந்த கட்டண முறை கொண்டு வரப்பட உள்ளது. இதனால் என்ன பாதிப்பு..? யாருக்கு பலன்..? மத்திய அரசின் இப்புதிய நடவடிக்கை மூலம் மின்சார பயன்பாட்டை பகல் நேரத்திற்கு மாற்றும் மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, பகல் நேரத்தில் வாஷிங் மெஷின், டிஷ்வாஷர் பயன்படுத்துவோருக்கு மின்சாரக் கட்டணத்தில் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

இதே வேளையில் இரவில் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோர், ஆதாவது இரவு முழுவதும் ஏர் கண்டிஷ்னர்களை பயன்படுத்துவோருக்கு மின்சார கட்டணம் புதிய மின்சார கொள்கையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

electricity bill increase

ஒட்டுமொத்தமாக, புதிய கட்டணங்கள் இந்தியாவின் electricity grid மிகவும் திறமையாகவும், நீடித்ததாகவும் மாற்றுவதற்கான ஒரு படியாகும். புதிய மின்சார கட்டண விதிகள் மூலம் அதிகமாக பயன்படுத்தும் புதைபடிவ – எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களின் சுமையைக் குறைக்கும் மற்றும் இரவில் மின்சாரம் தடைபடுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

சோலார் பவர் மலிவானது என்பதால், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் நேரத்தில் மின் கட்டணம் குறைவாக இருக்கும், அதனால் நுகர்வோர் பயன்பெறுவார்கள் என்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

See also  2வது நாளாக இன்றும் போக்குவரத்து துறை வேலை நிறுத்தம் தொடரும் Bus strike continued in 2nd day in tamilnadu 

சூரிய ஒளி இல்லாத நேரங்களில், வெப்பம் மற்றும் நீர் மின்சாரம் மற்றும் எரிவாயு அடிப்படையிலான மின்சார உற்பத்தி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் செலவுகள் சோலார் பவர் விட அதிகமாக இருக்கும் காரணத்தால் இது நேரத்தை அடிப்படையாக கொண்டு விலையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக 33 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின் தேவை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக 2023 ஆம் ஆண்டில் நாட்டின் பல பகுதிகளில் இந்தியா மிக மோசமான மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொண்டது. இந்த முக்கியமான நேரத்தில் புதிய மின் கட்டண விதிகள் வந்துள்ளது முக்கிய தேவையாகப் பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டின் அரசின் வரைவு திட்டத்தின் படி இந்தியாவின் மின் தேவை மார்ச் 2027 வரை இரு மடங்கு வேகமாக வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோடை மாதங்களில் அதிக மின் நுகர்வு மற்றும் தொழில்துறை செயல்பாடுகள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டப்படுகிறது.

மார்ச் 2027 இல் முடிவடையும் ஐந்து ஆண்டுகளில் வருடாந்திர மின்சாரத் தேவை சராசரியாக 7.2 சதவீதமாக அதிகரிக்கக் கூடும். இது மார்ச் 2022 வரையிலான ஐந்து ஆண்டுகளில் காணப்பட்ட 4 சதவீத வளர்ச்சி விகிதத்தை விடக் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.

Leave a Comment

error: Content is protected !!