வருகின்ற ஆடி அமாவாசை மலமாதம் இப்படி சிவபெருமானை வழிபடுங்கள்!! Aadi Amavasya How To Pray Lord Shiva

வருகின்ற ஆடி அமாவாசை மலமாதம்  இப்படி சிவபெருமானை வழிபடுங்கள்!!

Aadi Amavasya How To Pray Lord Shiva

Aadi Amavasya How To Pray Lord Shiva அமாவாசை தினத்தில் பித்ருக்களை வணங்கி, வழிபட்டு வந்தால் குடும்பம் தழைக்கும். பித்ருக்களின் சாபம் நீங்கும். அவர்கள் நம்மையும், நம் சந்ததியினரையும் ஆசிர்வதிப்பார்கள். தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வருகின்ற அமாவாசை தினங்கள் கூடுதல் விசேஷமானவை. அதிலும் ஆடி அமாவாசை தினம் தர்ப்பணம் செய்வதற்கும், அமாவாசை வழிபாட்டிற்கும் உகந்த நாள்.

இந்த வருடம் ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வந்திருப்பது பலரையும் குழப்பமடைய செய்துள்ளது. இரண்டு தினங்களில், எப்போது பித்ரு பூஜைகளைச் செய்வது? எப்போது அமாவாசை விரதம் இருப்பது என்று பொதுமக்களிடையே சங்கடமான கேள்வியாக இருந்து வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

நம் வாசகர்களின் தெளிவிற்காக ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் இது குறித்து கேட்ட போது, “பூர்வம் த்யக்த்வா பரம் க்ராஹ்ய” என்பது  வாக்கியம். இதன்படி, பூர்வம் என்ற முதலாவதை ”த்யக்த்வா” விட்டு, பரம் என்கிறதான பின்னால் வருவதை “க்ராஹ்ய” எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் பொருள்.

’பொதுவாக இப்படி ஒரே மாதத்தில் இரு அமாவாசை தினங்கள் வருவதை மலமாதம் என்கிறோம். அப்படி ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்களோ, பெளர்ணமி தினங்களோ வந்தால், முதலில் வருவதை விட்டு விட்டு, பின்னதையே சிறப்புடையதாக ஏற்க வேண்டும். இதை தான் நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன என்றார்.

Aadi Amavasya How To Pray Lord Shiva
Aadi Amavasya How To Pray Lord Shiva

ஆடி 31ம் தேதி வரும் அமாவாசை தினத்தை, ஆடி அமாவாசை தினமாக கொண்டு, கடல், ஆறு, குளக்கரைகள், நீர் நிலைகளில் தர்ப்பணம், தானம் முதலியன செய்து முன்னோரின் ஆசியைப் பெற்று வளமுடன் வாழ்வோம். உங்களால் முடிந்தால், அன்றைய தினம் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கித் தாருங்கள். முதியோர், வயதானவர்கள், உடல் நலமில்லாதவர்களுக்கு உணவு வாங்கித் தாருங்கள்.

இந்து தர்மத்தில் சவான் மாதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆடி மாதமும் கருதப்படுகிறது. சாவான் மாதம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இந்த மாதத்தில் வரும் அனைத்து தேதிகளும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த தேதிகளில் செய்யும் ஜோதிட பரிகாரங்கள் அதிக பலன் தரும். மலமாதத்தில் வரும் அமாவாசை நாளில் சிவனை வழிபட்டால் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடலாம். இந்த முறை மலமாதம் அமாவாசை 15 ஆகஸ்ட் 2023 அன்று வருகிறது. இந்த நாளில் உங்களுக்கு எந்தெந்த வேலைகள் செய்தால் பலனளிக்கும் என்று ஜோதிடரும் வாஸ்து ஆலோசகருமான பண்டிட் ஹிதேந்திர குமார் ஷர்மா விளக்குகிறார்.

See also  TNEA 2023 Application Online Link , Eligibility, Last date

மலமாதம் என்றால் என்ன?

ஒரே மாதத்தில் 2 அமாவாசை திதி வருகின்ற மாதத்தை ‘மலமாதம்’ என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. இத்தகைய மல மாதத்தில் புதுமனை புகுவிழா, நிச்சயதார்த்தம், திருமணம், நிலைவாசல் படி ஸ்தாபித்தல், புது கிணறு வெட்டுதல் போன்ற எத்தகைய சுப காரியங்களையும் செய்ய மாட்டார்கள். ஆடி மாதம் என்பதால் திருமணம், கிரகப்பிரவேசம் செய்ய மாட்டார்கள். எனவே இந்த மாதத்தில் சுப காரியம் செய்ய முடியாமல் போகுமே என்ற கவலைப்பட தேவையில்லை.

அமாவாசையின் முக்கியத்துவம்

இந்து மதத்தில் அமாவாசை திதியில் புனித நதியில் நீராடுதல், தானம் செய்தல் மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. அமாவாசை அன்று நீராடி, தானம் செய்பவர்களுக்கு, தர்ப்பணம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியும், வளமும் கிடைக்கும். இது தவிர, வாழ்க்கையில் வரும் பல பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.  அதே நேரத்தில் அமாவாசை தினத்தில் காலசர்ப் தோஷம் நீங்கவும் வழிபாடு செய்யப்படுகிறது. அமாவாசை அன்று வில்வ மரத்தை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தைப் பெறலாம்.

சிவபெருமானுக்கு இதை வைத்து அர்ச்சனை செய்யுங்கள்

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15, 2023 அன்று ஆடி மாதத்தின் அமாவாசை வருகிறது. சிவபெருமான் பித்ரு பிரதானமாக கருதப்படுகிறார். மத நம்பிக்கைகளின்படி, இந்த நாளில் முழு பக்தியுடன் சிவனை வழிபடுபவர்களின் ஜாதகத்தில் பித்ரு தோஷத்தின் தாக்கம் குறையத் தொடங்குகிறது. இது தவிர, மலமாதம் அமாவாசை நாளில் சிவனுக்கு ஜலாபிஷேகம் செய்வது, வில்வம் இலைகளை சமர்ப்பிப்பது போன்றவை செய்தால் உங்கள் பிரச்னைகள அனைத்தும் விலகும்.

பித்ரு தோஷத்தைப் போக்க பரிகாரம்

ஒருவரது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தும், அதிலிருந்து விடுபட வேண்டுமானால், அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து, புண்ணிய நதியில் நீராடி, சிரார்த்த சடங்குகள் மற்றும் பிண்டாடனைகள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்கள் முக்தி அடைகிறார்கள். இதனால் பித்ருக்களும் சாந்தமடைந்து, பித்ரு தோஷத்திலிருந்து விடுதலை பெறலாம். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.

அன்னதானம்

நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அமாவாசை நாளில் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் சகல விதநோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் அன்னதானம் கொடுப்பது சிறப்பு. அமாவாசை நாளில் உணவின்றி தவிப்பவர்கள்,ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன்போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

தமிழக பள்ளிகளுக்கு திங்கட்கிழமை அன்று விடுமுறை

See also  TNHRCE Job vacancy 2023 இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2023 சம்பளம் 20,000 இன்றே விண்ணப்பிக்கவும் TNHRCE Job vacancy 2023

அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்பணம் தர வேண்டும்.

இதனால் உங்கள் பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும். பசு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பித்ருசாப தோஷங்கள் விலகும். எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Leave a Comment

error: Content is protected !!