பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ.500 வங்கிக் கணக்கில் அனுப்ப முடிவு! Pongal Gift 2024 In Tamil Nadu

பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ.500 வங்கிக் கணக்கில் அனுப்ப முடிவு!

Pongal Gift 2024 In Tamil Nadu

Pongal Gift 2024 In Tamil Nadu தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பாக சர்க்கரை, பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்கள் பொங்கல் தொகுப்பு பொருட்கள் என்னென்ன வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Pongal Gift 2024 In Tamil Nadu
Pongal Gift 2024 In Tamil Nadu

புதுச்சேரி பொங்கல் பரிசு தொகுப்பு

இதே போன்று புதுச்சேரியில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.500 வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

புதுச்சேரியில் கடந்த 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

ஆனால் 2023ஆம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.470 பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

அதே போல் இந்த ஆண்டும் 3,53,249 ரேஷன் கார்டுகளுக்கு தலா 500 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 1,30,791 சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச துணிக்கு பதிலாக ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

தமிழ்நாடு பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்குவது வழக்கம்.

அந்த வகையில், 2024-ம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையை ஒட்டி, குடும்ப அட்டைததாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பச்சரிசியை கிலோ ஒன்றுக்கு 32 ரூபாய்க்கும், சர்க்கரை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய்க்கும், முழு கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

 Pongal Gift 2024 In Tamil Nadu

கொள்முதல் செய்யப்பட உள்ள பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, கரும்பு ஆகியவை நியாய விலைக் கடைகள் மூலம் 2 கோடியே 19 லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கான மொத்த செலவினத் தொகையாக 238 கோடியே 92 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Pongal Gift 2024 In Tamil Nadu

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பரிசு அறிவிப்பு இடம் பெறவில்லை. பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

12ம் வகுப்பு பொது தேர்வு எழுத மாணவர்களுக்கு தேர்வு எண் வெளியீடு TN 12th standard Public Exam Register Number Released 2024 check Now

See also  வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகை மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு Pongal prize amount in bank account Madurai High Court action order

Leave a Comment

error: Content is protected !!