ஜியோவின் அனல் பறக்கும் புதிய இன்டர்நெட் சேவை!
Jio Soon Mukesh Ambani Launch New Satellite Network Connection
Jio Soon Mukesh Ambani Launch New Satellite Network Connection: முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ இன்டர்நெட் ஆனது இப்போது புதிய சேவையை கொண்டு வர உள்ளது இதன் மூலம் மலை காடு பகுதிகளிலும் அதிவேக இன்டர்நெட் சேவை பெற முடியும் .அது மட்டுமல்லாமல் பூமிக்கும் செயற்கைக்கோள்களுக்கும் இடையிலான டேட்டா டிரான்ஸ்மிஷன் நேரம் கணிசமாக குறையும்.
ஜியோ தலைவர் மேத்யூ ஊமன் அண்மையில் ஜியோவின் சாட்டிலைட் சர்வீஸ் யூனிட்டுக்கு ஜியோ ஸ்பேஸ் பைபர் சர்வீஸ் அனுமதி கிடைத்த ஒரே வாரத்தில் அதை செயல்படுத்துவதற்கான திறன் இருப்பதாகத் தெரிவித்தார். உலகைச் சுற்றிவரும் சிறிய சாட்டிலைட் தொகுப்புகள் மூலம் சாட்டிலைட் சார்ந்த இன்டர்நெட் சேவையை தர முடியும்.
Join our Groups | |
join | |
Telegram | Join |
முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, தேசிய விண்வெளி வளர்ச்சி மற்றும் அனுமதி மையத்திடமிருந்து (IN-SPACe) முக்கியமான தரையிறங்குதல் உரிமை மற்றும் மார்க்கெட் அனுமதி ஒப்புதல்களைப் பெறும் நிலையில் உள்ளது. இந்த அனுமதி மூலம் செயற்கைக்கோள் சார்ந்த அதி நவீன இன்டர்நெட் சேவையை நாடு முழுவதும் ஜியோ தர முடியும்.
IN-SPACe அனுமதிக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஜியோ தந்துவிட்டதாகவும் விரைவில் அதற்கு அனுமதி கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த அனுமதிகள் இந்தியாவுக்குள் குளோபல் சாட்டிலைட் அலைவரிசையை அமல்படுத்துவதற்கு அவசியமாகும். இந்த அனுமதியைப் பெறுவதற்கு பல்வேறு அமைச்சகங்களின் பாதுகாப்பு அனுமதியைப் பெற வேண்டும்.
கடந்த ஆண்டில் ஜியோ நிறுவனம் லக்ஸம்பர்க்கை சேர்ந்த சாட்டிலைட் கம்யூனிகேஷன் நிறுவனமான எஸ்இஎஸ் உடன் ஒரு ஒப்பந்தம் செய்தது. அதன் மூலம் செயற்கைக்கோள்கள் மூலம் பிராட்பேண்ட் சேவை தரும் வசதியைப் பெற்றுள்ளது. ஜியோவின் சாட்டிலைட் பிரிவு செயற்கைக் கோள் மூலம் உலகளாவிய மொபைல் பர்சனல் கம்யூனிகேஷன்ஸ் சர்வீஸ் லைசென்ஸை மத்திய தகவல் தொடர்புத்துறையிடமிருந்து பெற்றுள்ளது. இன்னும் IN-SPACe அனுமதி மட்டுமே பாக்கி உள்ளது.
இப்போதைக்கு பார்தி ஏர்டெல் முதலீட்டில் இயங்கும் யூடெல்சாட் ஓன்வெப் தான் ஒரே குளோபல் சாட்டிலைட் கன்ஸ்டலேஷன் ஆபரேட்டராக IN-SPACe இன் அனுமதியைப் பெற்று செயல்படுகிறது. இப்போது யூடெல்சாட் ஒன்வெப் – ஜியோ எஸ்இஎஸ் கூட்டணி இந்தியாவில் சாட்காம் மார்க்கெட்டை கைப்பற்றும் போட்டியில் இறங்கியுள்ளது. இத்துறையில் ஜியோ, ஏர்டெல் மட்டும் அல்லாமல் ஸ்டார்லிங்க், அமேசான், டாடா ஆகிய நிறுவனங்கள்தான் முக்கியப் போட்டியாக இருக்கின்றன.
ஜியோ தலைவர் மேத்யூ ஊமன் அண்மையில் ஜியோவின் சாட்டிலைட் சர்வீஸ் யூனிட்டுக்கு ஜியோ ஸ்பேஸ் பைபர் சர்வீஸ் அனுமதி கிடைத்த ஒரே வாரத்தில் அதை செயல்படுத்துவதற்கான திறன் இருப்பதாகத் தெரிவித்தார். உலகைச் சுற்றிவரும் சிறிய சாட்டிலைட் தொகுப்புகள் மூலம் சாட்டிலைட் சார்ந்த இன்டர்நெட் சேவையை தர முடியும்.
இதன் முக்கிய அம்சங்கள்-
குளோபல் கவரேஜ்: சாட்டிலைட் இன்டர்நெட் சேவையானது ரிமோட் அல்லது வழக்கமான இன்டர்நெட் இன்ப்ராஸ்ட்ரக்சர்கள் குறைந்த பகுதிகளுக்கும் தர முடியும். அதாவது கிராமங்கள், மலைகள், காடுகளில் கூட அதிவேக இண்டர்நெட் சேவை பெற முடியும்.
லோ எர்த் ஆர்பிட் சாட்டிலைட்கள்: ஸ்டார்லிங்க் நிறுவனம் லோ எர்த் ஆர்பிட் சாட்டிலைட்டுகளைப் பயன்படுத்துகிறது. வழக்கமான சாட்டிலைட்களை விட இந்த சாட்டிலைட்கள் பூமிக்கு மிக நெருக்கமாக சுற்றிவரும். இதனால் பூமிக்கும் செயற்கைக்கோள்களுக்கும் இடையிலான டேட்டா டிரான்ஸ்மிஷன் நேரம் கணிசமாகக் குறையும்.
ஹைஸ்பீடு இன்டர்நெட்: இந்த வசதி மூலம் வழக்கமான வயர்கள் மூலம் தரப்படும் இன்டர்நெட் சேவையைக் காட்டிலும் விரைவான ஹைஸ்பீடு இன்டர்நெட் சேவையைத் தரமுடியும். ஈஸ் ஆப் இன்ஸ்டலேஷன்: யூசர்கள் ஒரு சிறிய சாட்டிலைட் டிஷ் மற்றும் மோடம்மை பெறுவார்கள். இந்த உபகரணங்கள் மூலம் லோ ஆர்பிட் சாட்டிலைட்களுடன் கனெக்ட் ஆகி அதிவிரைவு இன்டர்நெட் சேவையைப் பெறலாம்.
சவால்கள்: சாட்டிலைட் இன்டர்நெட்டில் பூமிக்கும் விண்வெளிக்கும் சிக்னல் பயணிக்கும் நேரம் தாமதமாதல், தட்பவெப்ப நிலை தடங்கல்கள் போன்ற பிரச்னைகள் இருக்கிறது. இதனால் செயற்கைக் கோள் சார்ந்த இன்டர்நெட் சேவை சற்று பாதிக்கப்படலாம்.