பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு..ரொக்கப்பரிசு அறிவிப்பு இடம் பெறவில்லை?
Pongal Gift 2024 Announced Tamil Nadu பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு..ரொக்கப்பரிசு அறிவிப்பு இடம் பெறவில்லை? கடந்த ஆண்டு ரூ.1000 பொங்கல் தொகுப்பில் இடம்பெற்ற நிலையில் இந்த ஆண்டு பணம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
Join our Groups | |
join | |
Telegram | Join |
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்குவது வழக்கம்.
அந்த வகையில், 2024-ம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையை ஒட்டி, குடும்ப அட்டைததாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பச்சரிசியை கிலோ ஒன்றுக்கு 32 ரூபாய்க்கும், சர்க்கரை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய்க்கும், முழு கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்பட உள்ள பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, கரும்பு ஆகியவை நியாய விலைக் கடைகள் மூலம் 2 கோடியே 19 லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கான மொத்த செலவினத் தொகையாக 238 கோடியே 92 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பரிசு அறிவிப்பு இடம் பெறவில்லை. பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.