Today School College Leave News Live Update
தொடர் கன மழை இன்று விடுமுறை நவ.15
Today School College Leave News Live Update கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Today School College Leave News Tamil
தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (15.11.2023) விடுமுறை- மாவட்ட ஆட்சியர்.
Join our Groups | |
join | |
Telegram | Join |
தொடர் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நவ.15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அம்மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.
தொடர் கன மழை காரணமாக இன்று (15/11/23 புதன்கிழமை) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது- கல்வி அமைச்சர் நமச்சிவாயம்.
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்தலாம்.
இது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து கொள்ளலாம்- தமிழக பள்ளிக்கல்விதுறை.
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்.
கனமழையால் ஏற்படும் எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவு.
பேரிடர்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் உத்தரவு.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – இந்திய வானிலை ஆய்வு மையம்.
தெற்கு அந்தமானில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சியால் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.
காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
கனமழை பெய்யும் என எச்சரிக்கை தரப்பட்ட கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமைச்சர்களை அனுப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
தேனி, மதுரை, விழுப்புரம், திருவாரூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உடனடியாக தொடர்புடைய மாவட்டங்களுக்கு சென்று பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான்-நிகோபார் தீவுகளில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மாலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இது நாளை காலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16ம் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
பின்னர், வடக்கு-வடகிழக்கு திசையில் மீண்டும் வளைந்து நவம்பர் 17 அன்று ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்க கடலை அடையும்.
எச்சரிக்கைக்கு பின்னரே தண்ணீர் திறக்க வேண்டும்.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரே, மழையால் நிரம்பும் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது- கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதை ஒட்டி, கடலோர மாவட்டங்களில் உள்ள 121 நிரந்தர உதவி பல்நோக்கு மையங்கள் மற்றும் 4967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
தூத்துக்குடியில் 2, திருநெல்வேலி மற்றும் நாகப்பட்டனத்தில் தலா ஒன்று என நான்கு குடிசை வீடுகள் நேற்று பெய்த மழையால் சேதமடைந்துள்ளன.
கனமழையால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.