மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு பள்ளிகள் இனி அரை நாள் மட்டுமே செயல்படும் மாநில அரசு உத்தரவு

இந்தியாவில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மாநில அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக இருந்து வருகின்றது. கோடை காலம் தொடக்கத்திலேயே பல மாநிலங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

இனி ஏப்ரல் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Title 1

அதாவது பள்ளிகள் அரை நாள் மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஏப்ரல் 29ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது